சென்னை: நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அவள் என்ற ஹாரர் - திரில்லர் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் கதையின் நாயகியாக பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அஜ்மல், மணிகண்டன், சரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டீஸர் காட்சிகள் ரத்தம் சொட்ட சொட்ட மிரள வைக்கும் விதமாக உள்ளது. ஆடுகளை கொடூரமாக சூறையாடும் நரியை வேட்டையாடுவது போன்ற உரையாடலில் விறுவிறுப்பான காட்சிகளோடு அமைந்துள்ள டீஸர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.