தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Jai Bhim: 'ஜெய் பீம்' இழப்பீடு கேட்கும் வன்னியர் சங்கம்; சூர்யாவுக்கு ஆதரவாக நெட்டிசன்கள்! - சூர்யா மீது வழக்கு

'ஜெய் பீம்' (Jai Bhim) படத்திற்கு வன்னியர் சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், ட்விட்டரில் சூர்யாவிற்கும் 'ஜெய் பீம்' படத்திற்கும் ஆதரவு தெரிவிக்கும்விதமாக '#WeStandWithSuriya' என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

jai Bhim
jai Bhim

By

Published : Nov 15, 2021, 1:30 PM IST

Updated : Nov 15, 2021, 2:07 PM IST

ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடித்துள்ள படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). இதில் ரஜிஷா விஜயன் (Rajisha Vijayan), பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் (amazon prime) ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியானது.

இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் (TN CM Stalin), கமல் ஹாசன், இயக்குநர் பா. இரஞ்சித், தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

அதிகாரத்தை எதிர்த்துச் சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது குறித்தும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்தும் ஜெய் பீம் திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக சில காட்சிகளும், பெயரும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கடிதம் வாயிலாக ஒன்பது வினாக்களையும் எழுப்பியிருந்தார். இதற்கு சூர்யா அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று ரத்தின சுருக்கமாக பதில் அளித்தார்.

சூர்யாவுக்கு ஆதரவு

அதைத் தொடர்ந்து சூர்யா வன்னியர் சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது திரைப்படம் எந்தத் திரையரங்குகளிலும் ஓட்ட முடியாது எனவும் மறைந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.

இந்நிலையில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி, ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைத் தவறாகச் சித்திரித்ததாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், அமேசான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "'ஜெய் பீம்' திரைப்படத்தில் வன்னியர் சமுதாயாத்தைத் தவறாகச் சித்திரித்ததற்கு இழப்பீடாக ரூ.5 கோடி வழங்க வேண்டும். அதற்கு முன்பாக நாளிதழ், ஊடகங்கள் வாயிலாக 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்படும்" என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு ஆதரவு

இதற்கிடையில், சூர்யாவிற்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கும் ஆதரவு தெரிவித்து நெட்டிசன்கள் சில ட்விட்டரில், "#WeStandWithSuriya" என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அப்போ 'சூரரைப் போற்று', இப்போ 'ஜெய் பீம்' - ஐஎம்டிபியில் தொடர் சாதனை படைக்கும் சூர்யா

Last Updated : Nov 15, 2021, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details