நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஷ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துவருகிறார். தற்போது 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' ஆகிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'லாபம்' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
சமூக வலைதளத்தில் மிக ஆக்டிவாக செயல்பட்டு வரும், ஷ்ருதி சமீபத்தில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அறுவைச் சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலர் அவரை கிண்டலடித்து வந்தனர்.
இதனால் மனமுடைந்த ஷ்ருதி தனது சமூகவலைதள பக்கத்தில், “எனது ஹார்மோனின் கருணையால், உடலும் மனதும் சீராக இருந்துவருகிறது. சில ஆண்டுகளாக ஹார்மோன்களை ஆரோக்கியமான முறையில் வைத்திருக்க பாடுபடுகிறேன். அது சுலபமல்ல. வலி நிறைந்தது. உடல் மாற்றங்கள் சுலபமல்ல. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது எளிது.