தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கௌதம், வெற்றி, சுதா, விக்னேஷ் சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்? - கௌதம்

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை ஒரு படம் எடுப்பதற்காக அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 directors

By

Published : Aug 30, 2019, 12:19 PM IST

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தரமான படங்களை விநியோகம் செய்துவருகிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆனால், தென்னிந்தியா சார்ந்த படங்கள் எதையும் நெட்ஃபிலிக்ஸ் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோரை ஒரு படம் எடுப்பதற்காக நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் அணுகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களான அனுராக் கஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இயக்கத்தில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ படத்தை தந்த நெட்ஃபிலிக்ஸ், அதே கூட்டணியில் ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நம் தமிழ் சினிமா இயக்குநர்கள் நெட்ஃபிலிக்ஸுக்கு ஓகே சொல்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.

ABOUT THE AUTHOR

...view details