தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நெட்ஃப்ளிக்ஸ் தொடர் - வெங்கடேஷுடன் இணையும் ராணா - வெங்கடேஷ்

அமராவதி: நெட்ஃப்ளிக்ஸ் வழங்கும் ராணா நாயுடு இணைய தொடரில் வெங்கடேஷும், ராணா டகுபதியும் இணைந்து நடிக்கின்றனர்.

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

By

Published : Sep 22, 2021, 7:19 PM IST

இரண்டு சூப்பர் ஸ்டார்கள், சக்திமிக்க அதிரடி ஆக்ஷன் கதை மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் , இதுதான் ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் தாரக மந்திரம். இந்த விருந்தில் இன்னும் சில ஆச்சர்யங்கள் சேர்க்கும் வகையில், பாகுபலி பல்வாள் தேவனாகிய ராணா டகுபதியும், அவரது மாமாவும், சூப்பர்ஸ்டாருமாகிய வெங்கடேஷ் டகுபதியும் திரையில் முதல் முறையாக நெட்ஃப்ளிக்ஸ் உடைய கிரைம் டிராமா தொடரான “ராணா நாயுடு” இணைய தொடரில் ஒன்றாக இணைந்து, தோன்றவுள்ளார்கள்.

"ராணா நாயுடு" தொடரை லோக்கோமோட்டிவ் க்ளோபல் (Locomotive Global Inc) நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான SHOWTIME® கிரைம் தொடரான “Ray Donovan” தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும் இத்தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த தொடர் பாலிவுட்உலகில், எந்த பிரச்சனையையும் சரி செய்யும், பிக்ஸராக வலம் வரும், ராணா நாயுடுவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது. இதன் அதிகாரப்பூர்வ உரிமையை ViacomCBS Global Distribution Group பெற்றுள்ளது. தொடரை கரண் அன்ஷுமானும், சபர்ன் வர்மாவும் இயக்குகின்றனர்.

இதுகுறித்து, ராணா டகுபதி கூறுகையில் , "இத்தொடர் எனக்கு பல சிறப்பான மதருணங்களை தந்துள்ளது . Netflix உடைய நீண்ட கதை சொல்லல் பாணியில், என் மாமா வெங்கடேஷுடன் முதல் முறையாக பணிபுரிவது, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இருவரும், இதுவரை செய்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இந்த வகை கதை சொல்லல் பாணியில், வித்தகர்களாக திகழும், ஒரு குழு மற்றும் ஒரு தளத்துடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் புதிய அனுபவமாகவும், சவாலானதாகவும் இருக்கும். நிச்சயமாக மகிழ்ச்சியான அனுபவங்கள் கொண்டிருக்கும். இத்தொடரின் படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

மேலும் வெங்கடேஷ் டகுபதி கூறுகையில், “ராணாவுடன் இணைந்து பணிபுரிவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் , நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஓர் அற்புதமான படைப்பாக இந்த தொடர் அமையும், நான் Ray Donovan தொடரின் மிகத்தீவிர ரசிகன். நானும் எங்களது குழுவும் இந்த ரீமேக்கில் அந்த தொடருக்கான நியாயத்தை தர, அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்வோம் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details