மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக திகழும் டொவினோ தாமஸ், ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துவருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஃபாரன்சிக்' (forensic) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து டொவினோ தாமஸ் இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கும் 'மின்னல் முரளி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில், டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தில் டொவினோ தாமஸுடன் குரு சோமாசுந்தரம், அஜு வர்கீஸ், ஃபெமினா ஜார்ஜ், சினேகா பாபு, ஷெல்லி நபுகுமார், பாலசந்திரன், பய்ஜு சந்தோஷ், சுர்ஜித், ஹரி ஸ்ரீ அசோகன், மாமுக்கோயா, பிஜுகுட்டன் உள்ளிட்ட பல திறமைமிகு நடிகர்கள் டொவினோ தாமஸுடன் இணைந்து இப்படத்தில் நடித்துவருகின்றனர்.
சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மின்னல் முரளி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்.28) வெளியானது. 90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது.
மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
'மின்னல் முரளி' நேரடியாக ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் பாசில் ஜோசப் கூறியதாவது, காமிக் புத்தகத்தில் தொடங்கி திரைப்படங்கள் வரை சூப்பர் ஹீரோ கதைகளுக்கு நான் எப்போதும் ரசிகன்.