கேல் கடோட் நடிப்பில் உருவாகவுள்ள 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' திரைப்படத்தின் உலகளாவிய உரிமைகளை நெட்பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்பை த்ரில்லராக உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்கைடான்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் இது இரண்டாவது பெரிய திரைப்படமாக உருவாகவுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று அமெசான் ஸ்டூடியோஸ் நிறுவனம் 'த டுமாரோ வார்' எனப்படும் சையின்ஸ் பிக்ஷன் திரைப்படத்தின் உரிமையை பெற்றது. இந்தத் திரைப்படம் முழுமையாகப் படமாக்கப்பட்டு அமேசான் நிறுவனத்தால் வாங்கப்பட்டாலும், கேல் கடோட் நடிக்கும் 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. புரொடக்ஷனின் ஆரம்பக் கட்டத்திலேயே 'ஹார்ட் ஆப் ஸ்டோன்' உள்ளது.