தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கேள்விப்பட்டேன்... ஜப்பானில் வாரம் இரு நாட்கள் "internet fasting" - விவேக்

இன்றைய இளைய சமுதாயம் இணைய அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர ஜப்பான் அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்

By

Published : Mar 15, 2019, 11:59 AM IST

இன்றைய இளம் தலைமுறையினர் வீடியோ கேம் மற்றும் அநாவசியமான வீடியோ பார்ப்பது போன்ற காரணங்களால் தங்களது பாதி வாழ்நாளை இழந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் செல்போன்களிலேயே அதிக நேரம் செலவழிப்பதால் உடல்நலக்கேடுகள் அதிகம் விளைவிக்கிறது. இதனால், நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கண் பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட வியாதிகள் வருவதாக எச்சரிக்கப்படுகிறது.

நேரம் காலம் பாராமல் போன்களிலேயே மூழ்கி கேள்வி கேட்பவர்களிடம் எடுத்தெறிந்து பேசுவது ஒரு சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்துவிட்டனர். செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டதனால் அதனை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரத்தை கழிக்கும் பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

அடுத்த சந்ததியினரை இந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்க வளர்ந்து வரும் நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஜப்பான் நாட்டின் கல்வி அமைச்சகம் தொலைபேசியில் மூழ்கி கிடக்கும் குழந்தைகளைமீட்க கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இன்டர்நெட்டிற்கு அடிமையாக இருப்பதாக கருதப்படும் குழந்தைகளை பெற்றோர்களோடு விளையாடிமகிழ்ந்து அவர்களை இயற்கை சூழலில் ஆலோசனையை பெற வைத்து "இணைய உண்ணாவிரத" (“ internet fasting”) என்ற முகாம்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். கேள்விப்பட்டேன். 'ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்!' என பதிவிட்டுள்ளார். அதன் கீழ் Creat initiative to come away from cyber addiction என்றுகோடிட்டு பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details