இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் வரும் கோர்ட் காட்சிகள் முடிந்த நிலையில் கதாநாயகிகளின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் 'நேர்கொண்ட பார்வை' என்பது அனைவரும் அறிந்ததே.
அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு... கண்ணீர் விட்டு அழுத நடிகை - நேர்கொண்ட பார்வை
'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது கண்ணீர் விட்டு அழுததாக அப்படத்தின் நாயகி அபிராமி தெரிவித்துள்ளார்.
இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் வரும் மூன்று கதாநாயகிகளில் யூ ட்யூப் மூலம் பிரபலமான அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய அபிராமி, பட வாய்ப்பிற்காக ஏறாத தயாரிப்பு நிறுவனம் இல்லை. சரியான வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கவலைப்பட்டேன்.
சினிமா மீதான நம்பிக்கை என்னை துரத்திக்கொண்டிருந்த நிலையில்தான் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிமிடம் ஆனந்த மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது' என்று அபிராமி கூறினார்.