தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தல' ரசிகர்களுக்கு யுவனின் காலை விருந்து ! - Single Track

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் 'வானில் இருள்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியானது.

அஜித்

By

Published : Jun 27, 2019, 9:46 AM IST

விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம 'நேர்கொண்ட பார்வை'. பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன பிங்க் திரைபடத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை உருவாகியுள்ளது. தமிழில் வெளிவந்த குரு படத்திற்கு பிறகு வித்யா பாலன் இப்படத்தின் மூலம் தமிழில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.மேலும், நிரஷ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்படிப்பு முடிந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் "வானில் இருள்" என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது. நாளை இரவு 7.45 மணிக்கு வெளியாகும் என போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த நிலையில் காலை ஏழு மணிக்கு பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், யுவன்ஷங்கர் ராஜா இசையில், உமா தேவி எழுதிய இந்த மெலடி பாடல், ரசிகர்களின் ஹார்ட் பீட்டாக இருந்து வருகிறது. கதையின் தேவையை புரிந்து ஒரு பெண்ணின் வலிகளை உணர்ந்து, கவிதை வரிகள் மனதை வருணிக்கும் இசையால் யுவனின் மெட்டுக்கள் மெல்லிசையாக இசைக்கிறது. உமா தேவி கவிதை வரிகள் பொதுவுடைமையுடன் மெளனம் சாதிக்கிறது. இந்த வைர வரிகள் எல்லோரும் மனதிலும் இசைக்கட்டும்.

ABOUT THE AUTHOR

...view details