தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கியவர் நெப்போலியன். பின்னர் நடிப்பை விட்டு அரசியலுக்குச் சென்ற இவர், தற்போது அரசியலை விட்டு விலகி, அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது 'கிறிஸ்துமஸ் கூப்பன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில், இப்படத்திற்காக ஹாலிவுட் நடிகை ஷீனா மோனினுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.
ரஜினிகாந்துடன் கூட்டணி வைக்கும் வல்லவராயன்? - poyes garden
நடிகரும், திமுகவின் முன்னாள் எம்பியுமான, நெப்போலியன் போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினி -நெப்போலியன்
இந்நிலையில், அப்படத்தில் பிசியாக நடித்துவரும் நெப்போலியன், போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டாலும், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அக்கட்சியில் நெப்போலியன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் நெப்போலியன் ரஜினிகாந்துடன் எஜமான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 11, 2019, 5:23 PM IST