தமிழ்நாடு

tamil nadu

சமந்தா குழந்தைப்பெற திட்டம்?

By

Published : Oct 10, 2021, 1:17 PM IST

சமந்தா விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டார் எனப் பிரபல தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார்.

neelima-revels-truth-about-samantha
neelima-revels-truth-about-samantha

சமந்தா - நாக சைதன்யா இருவரும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையில், இருவரும் படங்களில் பிஸியாக நடித்துவந்தனர்.

கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுகுறித்த எந்தத் தகவலையும் இருவரும் வெளியே சொல்லாமல் இருந்தனர்.

சமந்தா - நாக சைதன்யா

பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதற்கு சமந்தா தான் காரணம். அவர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வசைப்பாடினர்.

இதையடுத்து, தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருபவர்களுக்கு சமந்தா பதிலடி கொடுக்கும் விதமாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தா - நாக சைதன்யா

அதில், "நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கு ஏகப்பட்ட வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. குழந்தை வேண்டாம் என்று கருவை கலைத்ததாகவும் வதந்திகள் வருகின்றன. இவை அனைத்தும் தவறான வதந்திகள்.

விவாகரத்து என்பது மிகுந்த வலியைக் கொடுக்கும். அதிலிருந்து நான் வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவை. எவ்வளவு சொன்னாலும், என் மீது இந்த தாக்குதல்கள் தொடரும்.அதை இனிமேலும் நான் அனுமதிக்கமாட்டேன். இவர்கள் இதுபோன்று சொல்வது எதுவும் என்னை உடைக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா - நாக சைதன்யா

இந்நிலையில், சமந்தா விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டார் எனப் பிரபல தயாரிப்பாளர் நீலிமா குணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் தந்தை இயக்குநர் குணசேகர், சாகுந்தலம் படத்திற்காக சமந்தாவிடம் சென்றார்.

அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் குழந்தை பெற திட்டமிட்டிருக்கிறேன். அதனால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என சமந்தா கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

சமந்தா

இதையும் படிங்க : சமந்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்

ABOUT THE AUTHOR

...view details