'நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித் - ஹெச். வினோத் - போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள படம் 'வலிமை'. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்கான படபூஜைகள் நடைபெற்றது. படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான நடிகை, நடிகர்களை படக்குழு தற்போது தேர்வு செய்து வருகிறது. நாயகியாக நஸ்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு நஸ்ரியா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், 'வலிமை படத்தில் நாயகியாக நான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எதுவும் உண்மையில்லை. அனைத்தும் வதிந்தியே. எனவே பொய் செய்திகளை நம்பதீர்கள். ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும்' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விரரைவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என நஸ்ரியா தெரிவித்துள்ளதால், இவர் கதாநாயகியாக நடிப்பாரா இல்லையா என்ற குழப்பமும், விவாதமும் அதிகரித்துள்ளது.
இதையும் வாசிங்க: #வலிமை - அஜித்துடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா?