நடிகை நஸ்ரியா தீவிரமான 'பெட் லவர்' என்பது அவரது ரசிகர்கள் அறிந்த ஒன்றே. அதுமட்டுமின்றி அடிக்கடி தனது செல்ல நாய் ஓரியோவின் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுகிறார்.
அந்த வகையில் தற்போது தனது ஓரியோவிற்கு ஐந்து வயது ஆகியுள்ளதாக குறிப்பிட்டு, பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த பையனுக்கு இன்று 5 வயது ஆகியுள்ளது. என்னுடைய முழு இதயமும் இவனிடம்தான் உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ தான் வாழ்க்கை. என் கடைசி மூச்சு உள்ள வரை நான் உன்னை நேசிப்பேன். உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நான் என்ன வேண்டுமாலும் செய்வேன்'' என்று பதிவிட்டுள்ளார்.