இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி. அதன்பிறகு மாயா, யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். சர்ஜுன் இயக்கி சர்ச்சைக்குள்ளான ‘லக்ஷ்மி’ குறும்படத்தின் மூலம் இவர் பிரபலமானார். அதன்பிறகு மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவருகிறார்.
எழுத்தாளரை மணக்கிறார் ‘மாயா’ நடிகை - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
நயன்தாராவின் ‘மாயா’ படத்தில் குணச்சித்திர கதாபாத்திரமேற்று நடித்திருந்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, எழுத்தாளர் வெங்கடராகவன் ஸ்ரீநிவாசன் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
lakshmi short film actress
தற்போது இவர் எழுத்தாளர், விரிவுரையாளர் வெங்கடராகவன் ஸ்ரீநிவாசன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். அவர் ‘281 and beyond’, 'The Path Ahead' உள்ளிட்ட புத்தகங்களுக்கு விரிவுரையாளராக இருந்துள்ளார்.
வசந்த் இயக்கத்தில் தான் நடித்த ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை லக்ஷ்மி பிரியா பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.