தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்ற நயன்தாரா - நயன்தாரா பட அப்டேட்

சென்னை: நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா
நயன்தாரா

By

Published : Apr 10, 2021, 11:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ரஜினியுடன் ’அண்ணாத்த’, மலையாளத்தில் ’நிழல்’, அவரது காதலர் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளி ஊர்களுக்குச் சென்று வருகிறார். அப்போது எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று (ஏப்ரல்.10) தனி விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கேரளாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை கொண்டாட அவர்கள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்க் அணியாமல் கொச்சின் சென்ற நயன்தாரா

மேலும் இருவரும் அந்த புகைப்படத்தில் மாஸ்க் அணியாமல் சென்றுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:'சாதியத்தை அறுத்தெறிந்த கர்ணனின் வாள்' - அடுத்தடுத்து குவியும் பாராட்டுகள்

ABOUT THE AUTHOR

...view details