தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும் - நயன்தாரா உருக்கம்! - S. P. Balasubrahmanyam death

சென்னை: தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா

By

Published : Sep 26, 2020, 3:55 PM IST

Updated : Sep 26, 2020, 4:54 PM IST

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்.25) பிற்பகல் சென்னையில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எஸ்.பி.பி மறைவு குறித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த எஸ்.பி.பி குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும்.

உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'எஸ்.பி.பி தன்மை மிகுந்த மாமனிதர்' - நடிகை ராதா இரங்கல்!

Last Updated : Sep 26, 2020, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details