சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா, தற்போது ஏராளமான படங்களில் நடித்துவருகிறார். விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'நெற்றிக்கண்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
நெற்றிக்கண் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்று, விரைவில் வெளியாக உள்ளது. தற்போது விக்னேஷ் இயக்கத்தில், புதிய திகில் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.