மிலந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், 'நெற்றிக்கண்'. இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்றது.
நயன்தாராவின் 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியீடு - Idhuvum Kadandhu Pogum song
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் காரணமாக, இத்திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக நயன்தாரா கண்பார்வை அற்றவராக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இதுவும் கடந்து போகும்' பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மெலோடியாக உருவாகியுள்ள இந்தப் பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். மேலும் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலுக்கு கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை எவ்வளவு தெரியுமா?