சென்னை: நடிகை நயன்தாரா, செவ்வாய்க்கிழமை (மே 18) இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், செவிலியர் கையில் தடுப்பூசியே போடவில்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் புகைப்படத்தை வைரலாக்கி, மீம்ஸ்களால் பந்தாடினர்.