'மனசினகாரே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா. இதனையடுத்து தமிழில் 2005ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பாதித்தார்.
ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் அனைத்து டாப் நடிகர்களின் படங்களிலும் நடித்து அசத்திவருகிறார், ஹீரோக்களுடன் டூயட் பாடும் நடிகையாக மட்டுமில்லாமல் அவர், நாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களிலும் நடித்து வெற்றி கண்டுவருகிறார்.
சுமார் 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பயணித்துவரும் இவருக்குத் தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று (நவம்பர் 18) தனது 37ஆவது பிறந்தநாளைக் (Nayanthara Birthday) கொண்டாடிவருகிறார்.