’பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் ரஜினிக்கு 167-வது படமாகும். ’தர்பார்’ என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 10) மும்பையில் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.