நடிகை நயன்தாராவிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது சமீபத்தில்தான் தெரியவந்தது. இதனை நயன்தாரா சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டியின்போது அவரே தெரிவித்திருந்தார்.
நயன்தாரா என்னதான் படங்களில் பிஸியாக நடித்துவந்தாலும் ஷூட்டிங் இல்லாத சமயத்தில், குடும்பத்திற்காக நேரத்தைச் சரியாக ஒதுக்கிவருகிறார்.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா இதனிடையே நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து இன்று (செப். 27) திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
விஜபி தரிசனம் மூலமாகச் சென்ற இவர்கள், கோயிலுக்கு வெளியே வரும்போது எடுத்த காணொலி வெளியாகியுள்ளது. காதலரின் கையை விடாமல் நயன்தாரா நடந்துசெல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். இதுதவிர அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் நயன்தாரா பிஸியாக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க:ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் - வெளியானது 66ஆவது பட அப்டேட்