விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' திரைப்படத்தை இயக்கிய மிலிந்த ரௌவ் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்களின் ஆவலை தூண்டியது.
தற்போது இந்தத் திரைப்படத்திற்கு எடிட்டிங் செய்யும் லாரன்ஸ் கிஷோர் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஆக்ஷன் விருந்தாக இருக்கப்போகிறது. பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுபோகும் அளவுக்கு திரைப்படம் சுவாரஸ்யமான த்ரில்லராக இருக்கும். திரைப்படத்தின் 60 விழுக்காடு படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.