நடிகர் நிவின் பாலியை வைத்து 'நேரம்', 'பிரேமம்' என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்து, பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'பிரேமம்' படத்திற்கு பிறகு, அல்போன்ஸ் புத்திரன் புதிய படங்களை எதுவும் இயக்காமல் இருந்தார்.
ஃபகத் பாசிலுக்கு ஜோடியான நயன்தாரா! - பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
'பிரேமம்' பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஃபகத் பாசிலை வைத்து இயக்கும் பாட்டு படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கப் போகும் அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கமான ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில், ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ள படம் குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது, "எனது அடுத்தப் படத்தின் பெயர் 'பாட்டு’. ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். யுஜிஎம் என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. இம்முறை நான் இசையமைப்பாளராகவும் மாறி உள்ளேன். இப்படம் மலையாளத்தில் உருவாக்கப்பட உள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்களை படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 5 வருட இடைவெளிக்குப் பின் ஃபகத் பாசில் - நயன்தாராவை வைத்து அல்போன்ஸ் புத்திரன் படம் இயக்குவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்திலும் படம் குறித்தான எதிர்பார்ப்பிலும் உள்ளனர். நயன்தாரா சமீபகாலமாக தனது தாய்மொழியான மலையாள படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.