தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நேரடியாக மோதிக் கொள்ளும் நயன்தாரா-தமன்னா! - ஜூன் 14

'கொலையுதிர் காலம்' படத்தின் கதாநாயகியாக தமிழில் நயன்தாராவும், பாலிவுட்டில் தமன்னாவும் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Nayan and Tammanah

By

Published : May 24, 2019, 6:05 PM IST

'உன்னைப் போல் ஒருவன்', 'பில்லா-2' படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி தான் 'கொலையுதிர் காலம்' படத்தையும் இயக்கியுள்ளார். படம் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரமாகவும், கதாநாயகியாவும் நயன்தாரா நடித்துள்ளார். படம் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'காமோஷி' படத்தில் தமன்னா நடித்துள்ளார். மேலும் 'காமோஷி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார். இப்படமும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா-தமன்னா

இந்நிலையில் நயன்தாரா, தமன்னா இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்படத்தின் மூலம் நேரடியாக இருவரும் மோத உள்ளனர் என்று சமூக வலைதளத்தில் அவர்களது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details