ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கியுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.