தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியான நவரசா திரைப்படம் - நவரசா படம்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 'நவரசா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் வெளியான நவரசா திரைப்படம்
ஓடிடியில் வெளியான நவரசா திரைப்படம்

By

Published : Aug 6, 2021, 1:48 PM IST

ஓடிடி தளங்கள் அதிகமான பிறகு ஆந்தாலஜி படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெவ்வேறு கதைகளை, வெவ்வேறு இயக்குநர்கள் குறும்படங்களாக இயக்கி ஒரு பெரிய படத்தின்கீழ் கொண்டுவருவதே ஆந்தாலஜி ஆகும்.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி திரைப்படம், 'நவரசா'. ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து இயக்கியுள்ள இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

படம் பெயர்இயக்குநர்நடிகர், நடிகைகள்
பாயாசம்வசந்த்டெல்லி கணேஷ் ரோகிணி
கிடார் கம்பி மேலே நின்றுகெளதம் மேனன்சூர்யா ப்ரயகா ரோஸ் மார்ட்டின்
எதிரிபிஜாய் நம்பியார்விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ரேவதி
ரெளத்திரம்அரவிந்த்சாமிஸ்ரீராம் ரித்விகா
சம்மர் ஆஃப் 92பிரியதர்ஷன்யோகி பாபு ரம்யா நம்பீசன்
பீஸ்கார்த்திக் சுப்புராஜ்பாபி சிம்ஹா, கெளதம் மேனன் -
ப்ராஜெக்ட் அக்னிகார்த்திக் நரேன்பிரசன்னா, அரவிந்த் சாமி -
துணிந்தபின்சர்ஜுன்அதர்வா அஞ்சலி
இன்மைரதிந்தீரன் பிரசாத்சித்தார்த் பார்வதி

மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த இப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறதா என்பதைப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.

இதையும் படிங்க:’நவரசாவால் 11 ஆயிரம் குடும்பம் பயன்’ - கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details