‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் நடிகராக முத்திரை பதித்தவர் ஒளிப்பதிவாளர் நடராஜ் (எ) நட்டி. இவர் கடைசியாக தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் வில்லனாக தோன்றியிருந்தார். இவர் தற்போது ஹரூன் என்பவர் இயக்கும் திரில்லர் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் ‘எக்கோ’ எனும் படத்தில் பணியாற்றியவர் ஹரூன். இந்தப் படத்தில் நந்தினி, ஷாஷ்வி பாலா உள்பட 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். நடராஜ் இதில் சைக்கோவாக நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தை விஎம் முனிவேலன் தனது ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.