இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை முதன்முறையாக கைப்பற்றியதை மையமாக வைத்து '83' என்ற பாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரன்வீர் சிங், அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன், தாஹிர் ராஜ், ஜத்தின் சர்னா, கோலிவுட் நாயகன் ஜீவா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
NATRAJ SHOT - கபில் தேவுக்கு டஃப் கொடுக்கும் ரன்வீர் சிங்! - Ranveer singh
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ்-ஐ மைய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் ‘83’ படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Ranveer in 83 movie
கடந்த ஜூலை மாதம் கபில் தேவ் போன்று பவுலிங் போட தயாராகும் ஸ்டில்லை வெளியிட்ட ரன்வீர் சிங், சமீபத்தில் கபில் தேவின் ஃபேவரைட் ஷாட்டான நடராஜ் ஷாட் அடிப்பது போன்ற ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நான்கு பந்துகளில் கபில் தேவ் செய்த மேஜிக்... லார்ட்ஸ் டெஸ்ட் மெமரீஸ்