நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று (ஜூலை 22) தனது 36ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கிரிக்கெட் வீரரும், யோகி பாபுவின் நெருங்கிய நண்பருமான நடராஜன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
யோகி பாபு- யார்க்கர் கிங் அதில், "அண்ணன் யோகி பாபுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்த பிறந்தநாளில் உங்கள் வெற்றிகள் மற்றும் சாதனைகள் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யோகி பாபுவை, நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடராஜன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#HBD கூர்கா நாயகன் யோகிபாபு..!