தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ஹே ராம்’, ‘கிரிஷ்’ ஆகிய படங்களின் மூலம் அறியப்படுபவர் நசிருதீன் ஷா. ‘ஹே ராம்’ படத்தில் மகாத்மா காந்தி வேடமேற்று நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படம், நசிருதீன் ஷா நடிப்பில் உருவான ’A Wednesday!’ என்பது குறிப்பிடத்தக்கது.
அரை நூற்றாண்டு கலைஞனின் 69ஆவது பிறந்தநாள்! - கிரிஷ்
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுபெற்ற நசிருதீன் ஷா பிறந்தநாள் இன்று.
பாலிவுட் திரையுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக திகழும் நசிருதீன் ஷா, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிவற்றை தனது கலை பணிக்காக பெற்றுள்ளார்.
நசிருதீன் ஷா, 1949 ஜூலை 20ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில் பிறந்தவர். 1967ஆம் ஆண்டு வெளியான ‘அமன்’ என்னும் பாலிவுட் படத்தில் தோன்றிய நசிருதீன் ஷா, அரை நூற்றாண்டுகளாக நடித்துவருகிறார். மூன்று தேசிய விருது, வெனிஸ் திரைப்பட விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நசிருதீன் ஷாவின் திரைப்பயணம் தொடர வாழ்த்துகள்!