தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் வெங்கியின் 'நாரப்பா'! - நாரப்பா

'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Narappa
Narappa

By

Published : Jun 28, 2021, 5:32 PM IST

Updated : Jun 28, 2021, 6:09 PM IST

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக வெளியானது அசுரன். ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது.

சிறந்த படம், சிறந்த நடிகர் என்னும் இரண்டு தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது. தற்போது இந்தப்படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக 'நாரப்பா' என்ற பெயரில் உருவாகி வருகிறது. வெங்கடேஷின் 74ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி. கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்து வரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போல், தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்து வரும் போஸ்டர், டீசர் என நாரப்பா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகும் எனவும், ட்ரெய்லர் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது கரோனா பரவல் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. மேலும் தற்போதைய சூழல் மாறியதும் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நாரப்பா திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக ஜூலை மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் நாரப்பா படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் மலையாள திரைப்படமான 'த்ரிஷயம் 2' படத்தின் தெலுங்கு ரீமேக் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியாக தயாராக உள்ளது. 'த்ரிஷயம் 2' 2 படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கு ரீமேக்கையும் இயக்கியுள்ளார். இதில் மோகன் லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். இந்தப்படமும் நேரடியாக ஜூலை மாதம் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அசுரனின் அதே ஆக்ரோஷத்துடன் நடந்து வரும் 'நாரப்பா'!

Last Updated : Jun 28, 2021, 6:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details