'துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் ‘நரகாசூரன்’.
அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சுந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாக தாமதமானதால், அருண் விஜய்யை வைத்து ‘மாஃபியா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
தற்போது தனுஷ், மாளவிகா மோகனனை வைத்து ‘D43' இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ‘நரகாசூரன்’ திரைப்படம் பிரபல ஓடிடி தளமான சோனிலைவ்வில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகிறது.
'தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களை வெளியிடுவதில் களம்கண்டுள்ள சோனி லைவ் தற்போது அடுத்தடுத்து தமிழ்ப் படங்களின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வெளியாகிறதா 'நரகாசூரன்' - புது அப்டேட்