தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் நானியின் 'ஷியாம் சிங்கா ராய்' - ஷியாம் சிங்கா ராய்

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Shyam
Shyam

By

Published : Oct 18, 2021, 1:01 PM IST

ஓடிடி தளமான அமேசான் பிரைமில் சமீபத்தில் நானி நடிப்பில் வெளியான 'டக் ஜெகதீஷ்' ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நானி, நஸ்ரியா நடிப்பில் உருவாகிவரும் 'அன்டே சுந்தரானிகி', கீர்த்தி சுரேஷுடன் 'தசரா' உள்ளிட்ட படங்களில் நானி கவனம் செலுத்திவருகிறார்.

இந்நிலையில், நானி ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் 'ஷியாம் சிங்கா ராய்' படத்தில் நடித்துள்ளார். இதில் நானியுடன் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் நிறைவடைந்து திரையரங்கில் வெளியாகவுள்ளது.

'ஷியாம் சிங்கா ராய்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: நானி - நஸ்ரியா நடிப்பில் உருவாகும் தெலுங்கு படத்தின் தலைப்பு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details