விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ப்ரோசேவாரெவருரா'. இந்தப் படத்தில், ஸ்ரீவிஷ்ணு, நிவேதா தாமஸ், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தைத் தொடர்ந்து விவேக் ஆத்ரேயா நானியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.
'நேச்சுரல் ஸ்டார்' நானியுடன் தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா - நஸ்ரியா படங்கள்
தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகவுள்ள 'நானி 28' படத்தில் நாயகியாக நஸ்ரியா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Nani
தற்காலிகமாக 'நானி 28' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு நவம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் நானியின் 28ஆவது படமாகும். இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு நஸ்ரியா தனது கணவரும் நடிகருமான ஃபகத் பாசிலின் 'ட்ரான்ஸ்' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்நது 'நானி 28' படத்தின் மூலம் நஸ்ரியா தெலுங்கில் அறிமுகமாகிறார்.