செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற வெற்றிப் படங்களை தந்தவர்கள் செல்வராகவன் - தனுஷ். இந்தக் கூட்டணியில் மீண்டும் படம் வராதா என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ‘நானே வருவேன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், தமன்னா ஆகியோர் இதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். கரோனா காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, ‘நானே வருவேன்’ பட வேலைகள் தொடங்கவுள்ளன.
ஆகஸ்ட் 20 முதல் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷ் - செல்வா ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். இதற்கான இரண்டாவது பாடல் பதிவில் இருப்பதாக யுவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது நிச்சயம் - மிஷ்கின்