புலன் விசாரணை, த்ரில்லர், நகைச்சுவை என முக்கோண வடிவில் உருவாகும் கதையில் முதன்முறையாக ஆக்ஷன் நாயகியாக நந்திதா நடிக்கிறார். ‘ஐபிசி 376 (IPC 376)’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்திதா காவல் துறை ஆய்வாளராக நடிக்கிறார்.
'ஐபிசி 376' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! - ஐபிசி 376
நந்திதா நடிப்பில் உருவாகிவரும் 'ஐபிசி 376' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ipc 376 poster
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது 'ஐபிசி 376' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே இந்தப் படத்திலும் பெண்கள் மீதான பாலியல் குற்றச் சம்பவங்கள் குறித்து கதை அமைக்கப்பட்டிருப்பதால் படத்திற்கு அவ்வாறு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.