அட்டகத்தி, எதிர் நீச்சல், முண்டாசுபட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நந்திதா. இவர் வைபவ் உடன் ’டாணா’, சிபிராஜுடன் ’கபடதாரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
இதனிடையே தற்போது பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடிக்கும் 'தபாங் 3' திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் திரையுலகில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு நத்திதாவுக்கு பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.