இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
"நம்ம வீட்டுப்பிள்ளை" படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ் இதுதாங்கோ! - சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு தணிக்கை குழு தற்போது சன்றிதழ் வழங்கியுள்ளது.
NVP
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடலும் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரில் படம் செப்படம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது. மேலும் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.