இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சேவின் மகனும், இலங்கை மத்திய அமைச்சருமான நமல் ராஜபக்சே நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே மகன் - namal rajapaksa wishes vijay sethupathi for biopic
இலங்கை கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு இலங்கை மத்திய அமைச்சர் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "இந்த நெருக்கடியான காலத்தில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக தயாராகும் ‘800’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது பெரிய செய்தி. மிகவும் திறமை வாய்ந்த நடிகர் நமது கிரிக்கெட் லெஜண்டின் பயோபிக்கில் நடிப்பதே மிகவும் சரியானது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... முரளி சொன்ன அந்த வார்த்தை.... சொக்கிப்போன மக்கள் செல்வன்!