தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரஜினிகாந்த் இலங்கை செல்வதில் தடையா? - விளக்கமளித்த ராஜபக்ச மகன் - இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் எம்பியுமான நமல் ராஜபக்ச

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் எம்பியுமான நமல் ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார்.

namal rajapaksha tweet about rajini
namal rajapaksha tweet about rajini namal rajapaksha tweet about rajini

By

Published : Jan 18, 2020, 1:21 PM IST

நடிகர் ரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ரஜினிகாந்த் இலங்கைக்கு வரவேண்டும் என்றும் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியது.

தொடர்ந்து ரஜினி இலங்கை செல்வதற்கு அந்நாட்டு அரசு விசா வழங்கவில்லை என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தவித தடையும் கிடையாது என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் எம்பியுமான நமல் ராஜபக்ச ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. நானும் எனது தந்தையும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம்; ஒரு தடையும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஏழுபேர் சிறைவாசம்; அரசியல் காரணங்கள்தான் காரணமா? பதிலளிக்கிறார் விக்னேஸ்வரன்

ABOUT THE AUTHOR

...view details