இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, சமுத்திரக்கனி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அண்ணன் ஒருத்தன் இருந்தாபோதும் 'எங்க அண்ணன்' சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் பாட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் படக்குழு முதல் பாடலை 23ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது இப்படத்தின் முதல் பாடலான எங்க அண்ணன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை நாகாஷ் அஜிஸ், சுனிதி செளஹான் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலின் சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இடையிலான அண்ணன்-தங்கை உறவை வெளிப்படுத்தும் விதமாக பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.