தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

என்ன வாழ்க்கை இது: நல்லகண்ணு - nallakannu

சென்னை: ’கொடுமையைப் பார்த்தால் கோபம் வராது, சோகத்தைப் பார்த்தால் அழுகையும் வராது, பெண்ணைப் பார்த்தால் காதலும் வராது என்றால் என்ன வாழ்க்கை இது’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

முந்திரிக்காடு

By

Published : Jul 28, 2019, 1:02 PM IST

இயக்குநர் மு களஞ்சியத்தின் தயாரிப்பில் தயாராகியுள்ள படம் ”முந்திரிக் காடு”. இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் மகேந்திரனின் மகன் புகழ், கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, சி. மகேந்திரன், சீமான், இயக்குநர் ராஜுமுருகன், இயக்குநர் சசி ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் இசை குறுந்தகட்டை சீமான் வெளியிட தயாரிப்பாளர் ஜி.வி. ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிகழ்ந்த நிகழ்வுகள் ”சொல்லாத கதைகள்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை நல்லகண்ணு வெளியிட இயக்குநர் ராஜுமுருகன், இயக்குநர் சசி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் நல்லகண்ணு பேசுகையில், “இந்தப் படத்தின் கருத்து விரைவில் வெளியில் வரவேண்டும் என்று எண்ணினேன், ஏங்கினேன். இந்தப் படம் உருவாக காரணமானவர்களைப் பாராட்டுகிறேன். நூற்றுக்கணக்கான ஆணவக்கொலை நடக்கும்பொழுது அதை பார்ப்பவர்களுக்கு உணர்வுகள் வரவில்லையே என்று கவலையாக இருக்கும்.

கொடுமையைப் பார்த்தால் கோபம் வராது. சோகத்தைப் பார்த்தால் அழுகையும் வராது, பெண்ணைப் பார்த்தால் காதலும் வராது என்றால் என்ன வாழ்க்கை இது. நடப்பது நடப்பதாகவே இருக்கிறது. வாழ்வது வாழ்வதாகவே இருக்கிறது. இறப்பது இறப்பதாகவே இருக்கிறது. எந்த சாதியும் மேல் சாதி, கீழ் சாதி என்று இல்லை. வெளியில் நடக்கும் ஆணவக் கொலைகள் குறையவேண்டும்” என்றார்.

முந்திரிக்காடு இசை வெளியீட்டு விழா

அதனையடுத்து இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில், ”சில பேர் இயக்குநர்கள் அல்ல; சமூக செயற்பாட்டாளர்கள் என்றுதான் நான் கூறுவேன். மக்கள் அரசியலின் ஆயுதம்தான் இந்தப் படம். இந்தப் படம் சமகாலத்தில் வரக்கூடிய முக்கிய படமாகவும் சாதிக்கு எதிரான ஒரு ஆயுதமாகவும் இருக்கும்.

சாதி ஒழிப்பை ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இருந்துதான் தொடங்கவேண்டும். பார்ப்பனர்கள் யார் என்றால் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். பண பலம் நிறைந்த இரண்டு கட்சிகள். அது கட்சிகள் அல்ல; இரு கம்பெனிகள். அவற்றை எதிர்த்து பெரும் இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார் சீமான்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details