தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாகேஷுடன் கனெக்ட் ஆகும் சந்தானம் - நாகேஷ் பேரன் நடிக்கும் சர்வர் சுந்தரம்

நடிகர் சந்தானம் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்தான சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Nagesh connect in Santhanam starrer Server Sundaram
Nagesh connect in Santhanam starrer Server Sundaram

By

Published : Jan 26, 2020, 3:01 PM IST

அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த 'A1' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் 'டகால்டி', ஆனந்த் பால்கி இயக்கத்தில் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களின் வெளியீட்டுக்கும் சந்தானம் காத்திருக்கிறார். இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவும் சந்தானம் செம குஷியில் உள்ளாராம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு, தாமதமாகி வரும் ஜனவரி 31ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்பாக நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்' என்ற திரைப்படம் வெளியானது. தற்போது சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான பிஜேஷ், 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தந்தை ஆனந்த் பாபுவுடன் பிஜேஷ்

இதையும் படிங்க: மலையாள சூப்பர் ஹிட்டின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் கதிர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details