புதுமுக இயக்குநர் கோபி இயக்கும் படம் 'நானும் சிங்திள் தான்'. ரொமாண்டிக் காமெடி கலந்த இப்படத்தில் நாயகனாக அட்டக்கத்தி தினேசும், நாயகியாக தீப்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளார்.
இதுகுறித்து கோபி கூறுகையில், இதுவரையில் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் , இப்படத்தில் ஒரு ரொமாண்டிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில், ராஜேந்திரன் லண்டன் வாழ் தமிழராகவும், ’மிஸ்டர் லவ்’ என்று லவ்குருவாகவும் வலம்வருவார். ஒருதலை காதலர்களின் காதலை சேர்த்து வைப்பதற்கும், சிங்களாக இருப்பவர்களுக்கும் டிப்ஸ் கொடுக்கும் ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார்.
லவ் குரு மொட்டை ராஜேந்திரன் நாயகன் தினேசும் மொட்டை ராஜேந்திரனும் காமெடியில் பட்டையைக் கிளப்பியுள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜேந்திரனின் குரலுக்காகவே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. எனவே ராஜேந்திரனை லவ் குரு ஆர்ஜே-வாக பார்ப்பது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.