’நேர்கொண்ட பார்வை’ பட வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவை அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துமுடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.