கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து தனுஷ் கைவசம் சுமார் 5 படங்கள் உள்ளன.
அதில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படமும் அடங்கும். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு 'நானே வருவேன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.