இயக்குநர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த வாரம் வெளியான படம் நான் சிரித்தால். துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆதி நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் கலந்துகொண்டு பேசுகையில், சுந்தர்.சி தயாரிப்பில் ‘தலைநகரம்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது இரண்டாவது படம். சுந்தர்.சி என்னிடம் ‘கெக்க பெக்க’ குறும்படத்தை பார்க்க சொன்னார். பார்த்ததும் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன்.
அது இக்குறும்படத்தில் இல்லை. ஆனால், நாங்கள் ‘டில்லி பாபு’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறோம். நான்தான் வில்லனா? என்றேன். இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன்.