சென்னை: சமுத்திரகனி இயக்கத்தில் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'நாடோடிகள் 2' படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் காதல், நட்பு, உறவின் மகத்துவத்தை சொன்ன இந்தப் படம் தற்போது இரண்டாம் பாகத்தில் புரட்சி, கம்யூனிசத்தை பேசியுள்ளது.
படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் நிலையில், தற்போது படத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
படத்தின் கதாநாயகன் சசிக்குமார், கதாநாயகி அஞ்சலி ஆகிய இருவருக்குமிடையே காதல் என்ற பட்டாம்பூச்சி பறந்ததா என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்தக் காட்சி அமைந்துள்ளது.
நாளையே மாற்றம் வேண்டும் என்கிற பேராசை இல்லை. ஆனால் அதை நோக்கி அடியெடுத்து வைப்போம் என்ற பாசிடிவான கருத்துடன் தொடங்கிய படத்தின் ட்ரெய்லர் சமகால நிகழ்வுகளை எடுத்துக்கூறும் விதமாக அமைந்தது. இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள இந்தக் காதல் காட்சி முதல் பாகத்தைப் போன்று சில ரசிக்கும்படியான காட்சிகள் படத்தில் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.